வாய்ப்பில்ல ராஜா… எகிப்து ராணி கெட்டப்பில் கவர்ச்சி காட்டி பட வாய்ப்பு தேடும் ராஷி கண்ணா!

Author: Shree
14 September 2023, 7:37 pm

பிரபலமான இளம் நடிகையான ராஷி கண்ணா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் அதிகம் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து டோலிவுட் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்துவிட்டார். மதராஸ் கஃபே என்ற இந்தி படத்தில் 2013ல் நடிகையை அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு அதே ஆண்டில் மனம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா தமிழில் 2018ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்தார்.

முதல் திரைப்படத்திலே நல்ல அறிமுகம் கிடைத்ததால் தொடர்ந்து அடங்க மரு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே இந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் ராஷி கண்ணா அதற்கு தகுந்தாற்போல் படுகவர்ச்சியாக மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது வித்யாசமாக கவர்ச்சி காட்டுகிறேன் என எகிப்து ராணி கெட்டப்பில் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீப நாட்களாகவே ராஷி கண்ணா வித விதமாய் கவர்ச்சி வாய்ப்பு தேடி வருகிறார். ஆனாலும் அவரை எந்த ஒரு இயக்குனரும் தயாரிப்பாளரும் கண்டுக்கொள்ளவே இல்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 358

    0

    0