காத்து மேல காத்து வாங்கும் ராயன்.. ஏறிய வேகத்தில் இறங்கும் படத்தின் வசூல்..!
Author: Vignesh31 July 2024, 10:09 am
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வட சென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திருப்பங்களும் ஆக உருவானது.
ராயன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிறது. படத்தின் முதல் ஐந்து நாள் வசூல் விவரம் குறித்து பார்க்கையில், முதல் நாளில் படம் அனைத்து மொழிகளிலும் இந்திய அளவில் 13.65 கோடிகளும் இரண்டாம் நாளில் 13.75 கோடிகளும் செய்துள்ளது என தகவல் வெளியானது. அதேபோல், மூன்றாவது நாளில் 15 புள்ளி 25 கோடிகளும் வசூல் செய்துள்ளது.
நான்காவது நாளில் படம் 5.8 கோடிகளும் ஐந்தாவது நாளில் 4.8 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனால், படம் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட 52 கோடிகளை வசூல் செய்துள்ளது. படத்தின் வசூல் வார இறுதி நாட்களில் நாளுக்கு நாள் அதிக வசூல் குவித்தது.
ஆனால், திங்கட்கிழமை முதல் தொடர்ந்து படம் வசூலில் மிகவும் குறைவாகவே வசூல் செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், ராயன் படம் 100 கோடிகளை வசூல் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தாலும், ஆடியன்ஸ் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அடுத்து ரூபாய் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.