ராயன் பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு.. உங்க ஸ்பீடு புரியுது ஆனா பாலா இருக்காரு பார்த்து..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: அந்த விசயத்தில் நமீதாவை ஏமாற்றிய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!

இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார். இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், காளிதாஸ், ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். சமீபத்தில், தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் வெளியானது.

மேலும் படிக்க: ஒரு செகண்ட்ல சமந்தான்னு நினைச்சிட்டோம் – நியூ லுக்கில் Video வெளியிட்ட வரலட்சுமி சரத்குமார்..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் பெரிதும் எதிர்பார்ப்பில் முன்னதாக ராயன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், தேர்தல் நடைபெற்றதால், ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்த நிலையில் ராயன் படத்தை ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டு உள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதைப்போல, பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் தயாராகி வருகிறது. ராயன் மற்றும் வணங்கன் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால், பாலா மற்றும் தனுஷ் இடையே மோத வேண்டி வரும் என்று கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…

35 minutes ago

தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?

அஜித்தின் குட் பேட் அக்லி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக படம் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகமாக…

56 minutes ago

அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி உத்ததரவு!

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

1 hour ago

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு… கொந்தளித்த கனிமொழி எம்பி : என்ன நடந்தது?

திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…

2 hours ago

அதிமுகவில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுகிறேன்…. கோவை மாவட்ட முக்கிய பிரமுகரின் திடீர் அறிவிப்பு!!

கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…

15 hours ago

ஸ்மார்ட் மீட்டரில் மிகப்பெரிய ஊழல்? ஆதாரங்களுடன் தயாராகும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…

16 hours ago

This website uses cookies.