ஹாலிவுட் ரேன்ஞ்; இரத்தம் தெறிக்குது; பேய் மாதிரி வந்தான்; ராயன் டிரைலர்

Author: Sudha
17 July 2024, 10:14 am

தனுஷ் நடிப்பில் மற்றும் இயக்கத்தில் உருவாகி உள்ள அவரது 50வது படம் ‛ராயன்.நேற்று மாலை ராயன் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம்,எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 26ல் படம் வெளியாக உள்ளது.பட ரிலீஸ் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

2 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டிரைலர் வட சென்னை பின்னணியில், தாதா தொடர்பான கதையாக இருக்கும் எனத் தெரிகிறது. எஸ்.ஜே.சூர்யா – தனுஷ் இடையேயான மோதல் தான் கதை என டிரெய்லர் பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

தனுஷ் ஆக்ரோஷமாக எதிரிகளை வெட்டி சாய்க்கிறார். டிரைலர் முழுக்க ஆக்ஷனும், ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. ‛‛காட்டில் ஆபத்தான மிருகம் ஓநாய் தான் இவன் பேய் மாதிரி வருவான்… இறங்கி செய்வான் போன்ற வசனங்கள் தனுஷை குறிக்கும் விதமாக டிரைலரில் உள்ளது.

இதன் படம் சென்சாரில் அதன் திரில் காட்சிகளுக்காக ஏ சான்று பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?