ரச்சிதாவுக்கு விரைவில் 2வது கல்யாணம்… மாப்பிள்ளை எல்லாருக்கும் தெரிஞ்ச இயக்குநர்தான் : பரபரப்பை கிளப்பிய பயில்வான்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 5:07 pm

சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து பேமஸ் ஆனவர் ரச்சிதா. இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.

நடிகை ரச்சிதாவுக்கும், சீரியல் நடிகர் தினேஷுக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்ததாக செய்திகள் வெளிவந்தன.

வெளியில் இருக்கும் போது இதுகுறித்து எந்தவித கருத்துக்களும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த ரச்சிதா, பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும் தான் தனது கணவர் தினேஷை பிரிந்ததற்கான காரணம் குறித்து உருக்கமாக பேசினார்.

தனது பெற்றோருக்கு தான் பண உதவி எதுவும் செய்யக்கூடாது என தினேஷும், அவரது குடும்பத்தினரும் தடுத்ததாகவும், அதனால் அவரை பிரிந்ததாகவும் கூறி இருந்தார்.

அதுமட்டுமின்றி திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த ரச்சிதாவை அவரது கணவர் குடும்பத்தார் குழந்தை பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியதும் தனது விவாகரத்து முடிவுக்கு ஒரு காரணம் என ரச்சிதா தெரிவித்திருந்தார். இதன்மூலம் தற்போது தான் சிங்கிளாக இருப்பதை ரச்சிதா உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில், நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை பற்றி பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வரும் பயில்வான், ரச்சிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் ரச்சிதா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவர் கூறி உள்ளார்.

ரச்சிதா, சீரியல் இயக்குனர் ஒருவரை ரகசியமாக காதலித்து வந்ததாகவும், அவரைத்தான் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பயில்வான் கூறி உள்ளார். பயில்வான் கூறிய இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அந்த சீரியல் இயக்குனர் யார் என்கிற தகவலை பயில்வான் வெளியிடவில்லை.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 507

    0

    0