இதுக்கு இந்தியனையே ரீ-ரிலீஸ் பண்ணிருக்கலாம்; ரச்சிதாவின் ஓபன் கமெண்ட்

Author: Sudha
14 July 2024, 12:47 pm

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார் ரச்சிதா மகாலட்சுமி.பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.சில திரைப்படங்களிலும் முன்னணி பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்,சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் இந்தியன் 2. இந்தியன் வெளிவந்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருவதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய தவறிவிட்டது. நீளமான காட்சிகள், திரைக்கதை சரியில்லை என பலரும் இந்தப் படத்தை பற்றி விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. அதில், இதுக்கு பேசாமல் இந்தியன் படத்தையே ரீ ரிலீஸ் செய்திருக்கலாம்.மிகவும் ஏமாற்றம் அடைந்தேன் என பதிவிட்டுள்ளார்.

  • Madha Gaja raja massive hits and breaks in Blockbuster office பிளாக்பஸ்டர் ஹிட்டான மதகஜராஜா.. 10 நாளில் பட்டையை கிளப்பிய வசூல்..!!