பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்கின் போது, நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசி இருந்தார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.
அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம். ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸில் இருந் துவெளியேறிய தினேஷ் ஒரு பேட்டியில், நான் பிக் பாஸ் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று நினைத்துதான் உள்ளே சென்றேன். ஆனால், வெளியே வந்து பார்த்ததில் எந்த இடத்தில் இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது. இனி ரக்ஷிதா மாறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். இதற்கு, மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று தினேஷ் பேசி இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரக்ஷிதா தற்போது தினேஷை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அந்த பதிவில் “எனக்கு கெட்டது செய்தவர்கள் எனது பதிவு எல்லாமே அவர்களைப் பற்றிய தான் என நினைப்பார்கள்.. நல்லா இருங்க” என ரக்ஷிதா பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் ரக்ஷிதா தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் சீச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா ஒரு பெண்ணை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருந்தா அந்த பொண்ணு இந்த அளவுக்கு பேசும் என்று தினேஷை தாக்கியும் பேசி வருகின்றனர்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.