ஆண்களுக்கு 5 நிமிஷம் போதும்.. ஆனா, பெண்களுக்கு.. புலம்பித் தள்ளும் ரக்ஷிதா மகாலட்சுமி..!

Author: Vignesh
4 December 2023, 1:45 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார். இதற்கிடையில், தினேஷ் தன் மனைவிக்காக பிக் பாஸ் சென்றதாகவும், அங்கு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Rachitha-updatenews360-1

சமீபத்தில், ரட்சிதா பேட்டி ஒன்றில் தான் ஆண்களைப் பார்த்து ஏங்கி இருப்பதாகவும் ஏனென்றால், ஒரு நிகழ்ச்சி கோ வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு ஐந்து நிமிடம் போதும் தயாராகி விடுவார்கள். ஆனால், பெண்கள் எங்களால் அப்படி தயாராக முடியவில்லை என்று வேதனைப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Rachitha-updatenews360-1

மேலும், புடவை அணியும் போது தான் சிரமப்பட்டு அணிவதாகவும், அதுதான் தன்னுடைய அடையாளம் என்றும் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் போது கட்டிய சேலையை போல் பெண்கள் பலர் கடைகளில் வாங்கி பயன்படுத்தினார்கள். என் ஆடை விஷயத்தில் கவனம் செலுத்த அதுதான் காரணம் என்றும், இருந்தாலும் ஆண்களுக்கு ஐந்து நிமிடம் முடிந்து விடக்கூடிய வேலை பெண்களுக்கு 15 லிருந்து 30 நிமிடங்களாக செய்ய வேண்டியிருக்கிறது என்று ரக்ஷிதா புலம்பி தள்ளி இருக்கிறார்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!