இதுதான் ரியல் ட்விஸ்ட்.. அவருக்கும் ரச்சிதாவுக்கும் சொல்ல மறந்த கதை.. தினேஷை பிரித்தது இவர் தானா?..!

Author: Vignesh
20 December 2023, 1:45 pm

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Rachitha-updatenews360-1

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், ரக்ஷிதா தினேஷின் பெயரை தன் கையில் பச்சை குத்தி இருந்தார். ஆனால் தற்போது ரச்சிதா கையில் இருந்த டாட்டூவை மறைத்து அதன்மேல் வேறொரு டாட்டூவை ரச்சிதா பதிந்திருக்கிறார்.

இதன் மூலம் தினேஷ் உடன் இனிமேல் வாழப்போவதில்லை என்று மறைமுகமாக ரக்ஷிதா கூறுகிறார் என்றும், இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் தினேஷ் பெயரை எடுத்து விட்டீர்களா அது உண்மையா என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தினேஷ் ரட்சிதாவை பிரித்த நபர் யார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அது வேறு யாரும் இல்லை தினேஷ் உடன் தற்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள விஷ்ணு தான் என்று கூறப்படுகிறது.

அதாவது, ரட்சிதாவுக்கும் விஷ்ணுவுக்கும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்த போது இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். தோழிக்கு உதவி செய்யும் வகையில், ரட்சிதா தரப்பில் மட்டும் விளக்கம் கேட்டு அவருக்கு ஆதரவாக விஷ்ணு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தினேஷ் மீது பல புகார்களை அளித்த ரட்சிதாவின் பின்னணியில் விஷ்ணுவின் வேலை இருந்திருக்கலாம் என்றும், இதனால் தான் தினேஷ் பிக் பாஸ் வீட்டில் விஷ்ணு மீது கடும் கோபத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது ஃபீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருப்பதாலோ என்னவோ தினேஷ் சற்று அமைதியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 315

    0

    0