தினேஷ் கூட சேர வாய்ப்பே இல்லை?.. எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன்: எமோஷனலான ரக்ஷிதா..!

Author: Vignesh
1 December 2023, 3:15 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg boss 7 tamil-updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர். மேலும், ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தினேஷ் பேசுகையில், என் வாழ்க்கையில் எட்டு வருடம் பின்னால் போனது போல் இருக்கிறது. வாழ்க்கை ரொம்ப அன் பிரிடிக்டபுல் என சொல்லுவாங்க ஆனால், இது எந்த அளவுக்கு இருக்குமோ என என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது என ரச்சிதா பற்றி தினேஷ் மறைமுகமாக பேசி இருந்தார்.

rachitha-mahalakshmi_updatenews360

தற்போது, தினேஷ் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில், அவர் பேசும்போது ராக்ஷிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறான கருத்தையும் சொல்ல மாட்டோம். இருவரும் இப்போது தனியாக பிரிந்து இருக்கிறார்கள், மிகவும் நல்லவர்தான். அவரது, கேரக்டருக்கு நல்லது தான். ஆனால், இப்போது தவறான நடத்துதலின் கீழே இருக்கிறார். ஆனால், இப்போது எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே புரியவில்லை. அதேபோல, ரக்ஷிதாவை பற்றி எந்த மாதிரியான தவறான செய்தி வந்தாலும், நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது என்று வெளிப்படையாக பேசி இருந்தனர்.

Rachitha-updatenews360-1

இதனால் ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சோசியல் மீடியா பக்கத்தில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். எல்லோரும் வலி ஏற்படுத்தியவர்கள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்த அளவுக்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை சந்தித்திருப்பேன் என்று யாருமே யோசிக்கவில்லை என்று ரக்ஷிதா பதிவிட்டுள்ளார்.

Rachitha-updatenews360-1
  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 254

    0

    0