ட்ராமா ஆடிய சீரியல் நடிகை.. எந்த தப்பும் இல்லையாமே?.. வார்னிங் கொடுத்த போலீஸ்..!

Author: Vignesh
5 July 2023, 10:30 am

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Rachitha Mahalakshmi -updatenews360

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும், போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த செய்தி அப்போது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இது குறித்த விசாரணையில், தினேஷ் தவறான நோக்கத்தில் எந்த மெசேஜும் அனுப்பவில்லை என்றும், ரக்ஷிதா கூறுவது அனைத்தும் பொய்யான தகவல் என்று போலீசாரின் விசாரணை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rachitha-mahalakshmi-updatenews360

மேலும், இதுபோன்று புகார் அளித்தால் விவாகரத்து எளிதில் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இப்படி ரக்ஷிதா செய்தார் என்று தினேஷ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ரக்ஷிதாவின் வழக்கறிஞர் சொல்லிக் கொடுத்து இப்படி செய்தார் என்றும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து ரக்ஷிதாவின் உண்மை முகத்தை அறிந்த பலரும் அவரை சமூக வலைதளத்தில் கடுமையாக கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ