ரக்ஷிதாவுக்கு 2-ம் கல்யாணம்?.. வாழ்த்து சொன்ன பிக் பாஸ் விசித்ரா..!

Author: Vignesh
26 June 2024, 6:35 pm

சின்னத்திரையில் நட்சத்திர ஜோடிகளாக வளம் வந்தவர்கள் தினேஷ் மற்றும் ரக்ஷிதா ஜோடி. ஆனால் யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். தற்போது, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் தினேஷுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்று பலமுறை ரக்ஷிதா சமூக வலைதளங்களின் வாயிலாக போலீசில் புகார் கொடுத்தும் தெரியப்படுத்தியிருந்தார்.

Rachitha-updatenews360-1

ரக்ஷிதா இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்று சமீப காலமாக தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கவர்ச்சி போட்டோக்களை அவரது பக்கத்தில் பகிர்ந்த நிலையில், திகைப்பூட்டும் தருணங்களுக்கு தயாராக இருங்கள் ரசிகர்களுக்கு சப்ரைஸ் இருக்கு என்று குறிப்பிட்டிருந்தார்.

Rachitha-updatenews360-1

இந்த பதிவுற்கு நடிகை விசித்திரா, க்யூட் என்று கமெண்ட் செய்திருக்கிறார். ரக்ஷிதா இரண்டாம் திருமணம் செய்யப் போவதை தான் குறிப்பிட்டிருக்கிறாரா என்று ரசிகர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். ரக்ஷிதாவின் முன்னாள் கணவர் தினேஷுக்கும் விசித்திராவும் பிக் பாஸில் இருந்தே அடிக்கடி சண்டை வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!