நண்பர்கள் மூட்டிய தீ..! பிரிய போகும் ரக்ஷிதா மற்றும் தினேஷ் ஜோடி..?

Author: Rajesh
15 February 2022, 4:27 pm

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர்.

தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற புத்தம்புது சீரியலில் ரக்ஷிதா கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவரது கணவர் தினேஷுக்கு சீரியல்களில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மனைவி தன்னை விட அதிகம் சம்பாதிக்கிறார் என்பதாலும், அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இருவரும் தனித்தனியாக அவர்களது வீட்டில் வசித்து வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. எனவே இவர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சினையை சரி புகுந்த நண்பர்கள் செய்த குழப்பங்களே தற்போது இருவருக்குள்ளும் மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 3007

    3

    0