பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசியுள்ளார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது. என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.
அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம். ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக கூறியுள்ளார்.
பிக் பாஸ் இல் தினேஷ் ரச்சிதா குறித்து பேசியதையடுத்து இன்று நடிகை ரச்சிதா தன்னுடைய அம்மாவுடன் ஈஷா மையத்திற்கு சென்று எமோஷனாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், வலியின் குணமே அந்த வலியில் இருக்கிறது. வாழ்க்கையில் இறுதியானது உண்மை இதுதான். உங்களுடைய வாழ்க்கைக்கு ஆன்மீக ரீதியில் மறு தொடக்கம் செய்யுங்கள். உங்களுக்கு நான் நிறைய சொல்ல வேண்டும் என்றால், அமைதியாகவும் மௌனமாகவும் இருப்பது தான் இப்போதைக்கு விருப்பமாக இருக்கிறது என்று இதனை தற்போது ரக்ஷிதா கூறி இருப்பது ரசிகர்களுக்கு தனக்குத்தானே அறிவுரைகளை ஆன்மீகத்துடன் என்று கூறுகிறாரா அல்லது தினேஷ் குறித்து கூறுகிறாரா என்று கேள்வி ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
This website uses cookies.