தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரக்ஷிதா.. என்ன இப்படி பண்ணிட்டாங்க..!

Author: Vignesh
13 January 2024, 4:20 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி நூறு நாட்களைக் கடந்து வெற்றி.கரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

bigg-boss-7 - updatenews360

இந்தநிலையில், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

முன்னதாக, தினேஷுடன் சண்டை போட்டுவிட்டு அவரைப் பற்றி திட்டிய விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது இங்கு இவருடன் ஹவுஸ்மென்ட் ஆகவே, இருக்க முடியல இவர் கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான் திரும்பி வந்துவிடாதே தாயே என ரட்சிதாவிடம் சொல்வது போல் கேமராவில் கூறி இருந்தார். இதுதான் விசித்ராவின் உண்மை முகம் என சொல்லி நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

இது பெரும், சர்ச்சையான நிலையில் கமலஹாசனும் விசித்ராவை கண்டித்து இருந்தார். இந்நிலையில், விசித்ரா பற்றி இன்ஸ்டாகிராமில் ரக்ஷிதா பதிவிட்டு இருக்கிறார். அதாவது, இதயங்களை வெல்வது தான் முக்கியம் நீங்கள் என் இதயத்தை மட்டும் இன்றி என் ஆன்மாவையும் வென்று விட்டீர்கள் என ரக்ஷிதா பதிவிட்டு இருக்கிறார். மேலும், பைனலிஸ்ட் ஆக இருக்கும் தினேஷுக்கு எதிராக அவர் பதிவிட்டு இருப்பது ரசிகர்களிடையே இது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Rachitha-updatenews360-1
Rachitha-updatenews360-1
  • Mysskin ‘எந்திருச்சு வெளியே போயா’… கதை சொல்ல வந்த மிஷ்கினை அவமரியாதை செய்த பிரபல நடிகர்!