‘நெகட்டிவிட்டியை தள்ளி வைங்க..’ இது எனக்கு ‘மறக்க முடியாத நாள்’ நச் கேப்ஷனுடன் போட்டோவை வெளியிட்ட ரச்சிதா..!
Author: Vignesh10 February 2023, 4:30 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதல் சர்ச்சையில் ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். ராபர்ட் மாஸ்டரும் ரச்சிதாவை தன் வலையில் சிக்க வைக்க பிளான் போட்டும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார் ரச்சிதா.
இந்நிலையில், என்னை பொறுத்தவரை எனக்கு நீங்கள் செய்தது தப்பாக தெரியவில்லை. யாருக்கும் யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம். இனிமே எப்பவும் நீங்கள் என்னுடைய நண்பர் தான் என்றும் நெகட்டிவிட்டியை தள்ளி வைங்க என காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார் ரச்சிதா.
தற்போது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை ரச்சிதா பதிவிட்டு ‘மறக்க முடியாத நாள்’ என குறிப்பிட்டு இருக்கிறார். பிக் பாஸில் கமலுடன் இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.