தமிழ் சினிமாவில் 80களில் இருந்து முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா நாயர். இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையாக திகழ்ந்து அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மொழிப்படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார்.
இதனையடுத்து 1991ல் ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு பெண்களை பெற்றெடுத்தார். சினிமாவில் இருந்து விலகிய ராதா, தன் இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். மூத்த மகள் ஒருசில வெற்றிப்படங்களை நடித்து வந்த நிலையில் இரண்டாம் மகள் துளசியை மணிரத்னமின் கடல் படத்தில் நடிக்க வைத்தார்.
நல்ல அறிமுகம் கிடைத்தாலும் தற்போது இரண்டு மகள்களும் வாய்பில்லால் இருக்கின்றனர். அந்தவகையில் மூத்த மகள் கார்த்திகா சில வருடங்களாக நடிப்பு பக்கமே வராமல் சொந்தமாக தொழில் நடத்தி அதை கவனித்து வந்தார். இதையடுத்து தனது வாழ்வின் அடுத்தகட்டமாக ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கேரள முறைப்படி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இத்திருமணத்தில் திரை நட்சத்திரங்கள் பலர் கலந்துக்கொண்டனர். திருமணத்தில் நடிகை ராதா தன் மகளுக்கு கை, கழுத்து, கால் என அடுக்கடுக்காக கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிவித்து , தங்க இழையால் ஆன பட்டுப்புடவை அணிவித்து ஜொலிஜொலிக்க திருமணம் செய்துள்ளார். நடிகை ராதா மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகியது.
இந்நிலையில் ராதா மகளின் கணவர் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வாயடைக்க வைத்துள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட புதுமாப்பிள்ளை ரோஹித் துபாயில் இளம் தொழிலதிபராக இருந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.