அது தெரிந்திருந்தால் நான் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்… சர்ச்சை கிளப்பும் ராதா ரவியின் பேச்சு!

Author: Rajesh
12 January 2024, 2:42 pm

பழம்பெரும் வில்லன் நடிகரான ராதா ரவி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாகிக்கொண்டார். நடிகரும், அரசியல்வாதியுமான இவர் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் பதவியில் இருக்கிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணசித்திரவேடங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்

அவர் அவ்வப்போது பொது மேடைகளிலும் பேட்டிகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் எதையேனும் பேசி விமர்சனத்திற்கு ஆளாகுவார். மேலும், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை பற்றி பேசி எதையேனும் சர்ச்சை ஏற்படுத்துவார். அந்த வகையில் திரைப்பட விழா ஒன்றில் பேசி ராதா ரவி, நம்ம ஊரு நடிகைகளை நம்ம மொழி படங்களில் நடிக்க வைக்கவேண்டும். எங்கிருந்தோ வடநாட்டு நடிகைகளை அழைத்து வருகிறார்கள். அவங்க பொட்டு துணியில்லாமல் வராங்க… நம்ம ஊர் துணி ஒன்னு கூட அவங்ககிட்ட இல்லை.

நம்ம ஊரு ஆடைகளை கொடுத்து நம்ம ஊரு பெண்களை போல் மாற்றி நடிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு டயலாக் சொல்லிக்கொடுத்து புரியவைப்பதற்குள் படத்தையே எடுத்து முடித்துவிடலாம். அவர்களுக்கு தமிழே வராது. அவர்களுக்கு அதையும் தாண்டி டப்பிங்கில் லிப்சிங்கிங் சரியில்ல… அவர்களால் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாகிறது. கோடிக்கணக்கில் வீண் செலவு ஏற்பட்டு தயாரிப்பாளரின் தலையில் துண்டு போட்டு விடுகிறார்கள்.

ஏன் இங்கு நடிகைகளே இல்லையா? எனவே இந்தி நடிகைகளை தயவு செய்து தமிழ் சினிமாவிற்கு அழைத்து வராதீர்கள். எந்த காலத்திலும் இந்தியும் தமிழும் ஒத்து வரவே வராது. எனக்கு மட்டும் இந்தி தெரிந்திருந்தால் நன் எப்போவோ ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன். அதாவது படங்களில் வில்லனாக நடித்து ஐஸ்வர்யா ராய்யை கெடுத்திருப்பேன் என சொன்னேன். என்று மேடையில் அநாகரீகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

  • Rajinikanth Jailer 2 announcement ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!
  • Copyright © 2024 Updatenews360
    Close menu