என்னடா பேரு இது?.. ஆர்யாவின் முன்னாள் காதலியை பங்கமாய் கலாய்த்த ராதாரவி..!

Author: Vignesh
2 August 2023, 3:30 pm

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் பல தோல்விகள் அடைந்தாலும் திருமணத்தை தள்ளிபோட்டு வந்தார். பின் கஜினிகாந்த் படத்தில் ஜோடி போட்ட நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு முன்பு பெண் தேடும் நிகழ்ச்சியான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஹீரோவாக நடித்தார். 18 பெண்களில் மூன்று பெண்கள் இறுதிசுற்றுக்கு வர அதில் ஒருவராக இருந்தார் அபர்ணதி.

abarnathi - updatenews360

ஆர்யா மீது தீவிர காதலில் இருந்த அபர்ணதி தற்போது வரை ஆர்யாவை மறக்கவில்லை என்று இணையத்தில் காரணத்தோடு கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் சேர்ந்து ஜெயில் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அபர்ணதி இன்னும் ஆர்யாவை மறக்க முடியாமல் இன்ஸ்டா ஐடியில் அவரது பெயரை abarnathi_6ya என்று வைத்துள்ளார்.

தற்போது, Dani’s Acting Workshop Event நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராதாரவி அப்போது நிகழ்ச்சிக்கு வந்த நடிகையான அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி பெயர்களை வாசித்து வாயில நுழையாத பெயரை வச்சா நான் என்ன பண்றது என்றும், சிந்தித்து வாயில நுழையாத பெயரை வச்சிருக்கீங்கன்னு நடிகைகளின் பங்கமாய் கலாய்த்து உள்ளார். மேலும், மலையாள தயாரிப்பாளர் பிரதீப்பை உன்னை மலையாளினு யாரும் கண்டுபிடிக்கவே முடியாது என்று பேசி உள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி