கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.
கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகள்கள், 4 ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார், இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார். இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. குழந்தை நட்சத்திரமாக 6 திரைபடங்களில் நடித்துள்ளார். இதுவரை 220 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்திருந்தார்.
1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கியது. 1990 இல் இந்திய அரசு பத்மசிறீ விருதும், 2014 இல் பத்ம பூசண் விருதும் வழங்கியது. 2016 இல் செவாலியே விருது பெற்றார்.
கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இவரது திரைப்படங்களில் தொடர்ந்து ஒரு சில குறிப்பிட்ட நடிகர்களை மட்டும் நடிக்க வைத்துக் கொண்டே இருப்பார் அவர்கள் நடிப்பில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். உதாரணமாக நடிகர் டெல்லி கணேஷ், நாகேஷ், நாசர், சந்தான பாரதி போன்ற நடிகர்களை கமல் திரைப்படங்களில் அதிகமாக காண முடியும். இவர்களின் தனிப்பட்ட நடிப்பு தன்னுடைய திரைப்படத்திற்கு தேவையானதாக இருப்பதால் கமல்ஹாசன் தொடர்ந்து தனது படங்களில் இவர்களை நடிக்க வைத்துக் கொண்டிருப்பார்.
இதனிடையே, ஆரம்ப கட்டம் முதலே இவர்கள் அனைவரும் கமல்ஹாசனுடன் நண்பர்களாக இருந்தவர்கள். கிட்டத்தட்ட ராதாரவி கூட ஆரம்ப காலத்தில் இருந்து கமல்ஹாசனின் நண்பராக இருந்தார். இருந்தபோதும், கமல்ஹாசனின் அதிக படங்களில் ராதாரவியை பார்க்க முடியாது.
இது குறித்து ஒரு பேட்டியில் ராதாரவி கூறும் போது கமல்ஹாசன் திரைப்படங்களில் நாசர் அதிகம் வருவதை பலரும் பார்த்து இருப்பார்கள். கிட்டத்தட்ட நாசர் வருகிற கதாபாத்திரங்கள் எல்லம் ராதாரவி நடிக்க வேண்டியதாம். ஆனால் இடையில் கமலுக்கும் தனக்கும் ஆன கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம் என்வும், எல்லாம் தான் காரணம் என்றும், வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் கமலுடன் சில சண்டைகளை போட்டு விட்டேன் என அந்த பேட்டியில் ராதாரவி தெரிவித்து இருந்தார்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.