ரஜினி முகத்தை போட்டாலே இழுக்குது, இதுல உன் முகத்தை போட்டா..? : மேடையில் சூப்பர் சிங்கர் பிரபலத்தை கலாய்த்த ராதாரவி..!

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷை தொடர்ந்து தற்போது சினிமாவில் நாயகியாக அவரது மனைவி ராஜலக்ஷ்மியும் அறிமுகமாகி இருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மியின் ‘என்ன மச்சான், சொல்லு புள்ள’ என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள். விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள்.

பின் பல நாட்டுப்புற பாடல்களை இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள். மேலும், போட்டியில் செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்று வீட்டை தட்டிச் சென்றார்.

அதோடு இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவர்கள் வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மியின் இருவரும் உள்ளூர், வெளியூர் என பல கச்சேரிகளில் தங்களுடைய நாட்டுப்புற பாடலை பாடி வருகிறார்கள். மேலும், செந்தில் சினிமாவில் ஹீரோவாக படம் ஒன்றில் நடித்து இருந்தார்.

ஆனால், அந்த படம் மாபெரும் தோல்வியடைந்தது.தற்போது செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி சொந்தமாக ஒரு ஸ்டூடியோ ஒன்றை வைத்து நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘வாயா சாமி’ என்ற பாடலை தமிழில் ராஜலக்ஷ்மி தான் பாடி இருந்தார். புஷ்பா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியானது. அதே போல ”வாயா சாமி ” பாடலை இருவரும் ரி – கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்கள்.

தற்போது செந்தில் கணேஷ்– ராஜலக்ஷ்மி இருளி என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படி இவர்கள் இருவரும் சினிமாவில் பிசியாக இருந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரும் நாயகியாக களமிறங்கி வருகிறார். தற்போது ராஜலட்சுமி ‘Licence’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கணபதி பாலமுருகன் என்பவர் இயக்க இருக்கிறார். மேலும், இந்த படத்தில் நடிகர் ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

சமீபத்தில் தான் இந்த படத்தின் விழா ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ராஜலட்சுமி இது ஒரு தைரியமான கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க நான் தயங்கினேன் பின்னர் என் கணவர் கொடுத்த தைரியத்தால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார் ராஜலக்ஷ்மி. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது, அதில் அறம் நயன்தாரா லுக்கில் ராஜலட்சுமி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்தின் லான்ச் விழாவில், நடிகர் ராதரவி இந்த படம் குறித்தும் ராஜலட்சுமி குறித்தும் பேசிய போது ‘இந்த படத்தின் இயக்குனரை நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும் என்றும் ஏன் தயாரிப்பாளர் இடமே சொன்னேன் இவ்வளவு தைரியமாக இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறான்.

அதுவும் இந்த படத்திற்கு ராஜலட்சுமி நடிக்க வைத்திருக்கிறான் அதுதான் டாப். வேறு யாராக இருந்தாலும் வேறு யாரையாவது தான் தமிழ் செய்திருப்பார்கள். இந்த படத்தின் போஸ்டரை இங்கே ஓபன் செய்தார்கள். ராஜலட்சுமி போட்டோவை போட்டால் படம் வியாபாரம் ஆகிவிடுமா ? ரஜினி சார் மூஞ்சை போட்டாலே இழுக்குது ஆனால் ராஜலட்சுமி முகத்தை தைரியமாக போட்டு இருக்கிறார்கள் அதை நான் பாராட்டுகிறேன்.

இந்தக் கதைக்கு ஏற்ற ஒரு அற்புதமான கதாநாயகி குத்து விளக்கு ஏற்றிய போது கூட அவரது கணவரை அழைத்தது இது முதல் படம் அம்மா அடுத்த படத்திற்கெல்லாம் அவரை கூப்பிட்டுக் கொண்டு வருவாயா என்று பார் அடுத்த படத்திற்கு எல்லாம் கூட்டு வராதே தொல்லை. உன் கணவரை அழைத்து வந்தால் நீ பாதுகாப்பு என்று நினைக்கிறாய் ஆனால் நீ தான் உன்னுடைய பாதுகாப்பு என்று கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

5 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

6 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

6 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

7 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

7 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

7 hours ago

This website uses cookies.