ராதாரவியை கடிந்து கொண்ட விஜய்.. வரும்போது அத பண்ணாம வாங்க..!

Author: Vignesh
20 May 2023, 2:00 pm

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார்.

முன்னதாக விஜய்யின் சில தவறான நடவடிக்கையால் சில நடிகர்கள் மனகசப்புக்கும் ஆளாகி உள்ளனர். அந்த வகையில், நடிகர் நெப்போலியன், போக்கிரி படத்தின் போது தன் குடும்பத்தினரை கேரவனில் கூட்டிச்செல்லும் போது அவமானப்படுத்தப்பட்டேன் என்று முன்னதாக தெரிவித்து இருந்தார்.

Vijay-Napoleon-updatenews360

இதன் காரணமாக, இன்று வரை விஜய்யை நடிகர் நெப்போலியன் ஒதுக்கி வருவதாகவும் அந்த சம்பவத்தை விஜய் தவிர்த்திருக்கலாம் என்றும் பல செய்திகள் வெளியானது.

இதனிடையே, நெப்போலியனை போல், பிரபல நடிகர் ராதாரவியும் விஜய்யின் செயலால் அவமானப்படுத்தப்பட்டதாக சமீபத்தில் சித்ரா லட்சுமணன் எடுத்த பேட்டியொன்றில் ராதாரவி இதை தெரிவித்து இருந்தார்.

radha ravi vijay-updatenews360

மேலும், சர்கார் படத்தில் வில்லனாக விஜய்யுடன் ராதாரவி நடித்து இருந்தார். அப்போது, தன் பேரன் விஜய்யின் தீவிர ரசிகன் என்பதால் சர்கார் படத்தின் ஷூட்டிங்கின் போது அவரை சந்திக்க வைத்ததாகவும், குடும்பத்துடன் விஜய்யை சந்தித்து புகைப்படமும் எடுத்ததாக ராதாரவி தெரிவித்துள்ளார்.

அதன்பின் சர்கார் படத்தின் ஆடியோ லான்சின் போது மயங்கி மேடை படிக்கல்லில் இருந்து தவறிவிழுந்து விட்டதாகவும், உடனே விஜய் உதவி செய்ததற்கு நன்றி கூட சொல்லாத காரணத்தினால், விஜய் மேனேஜருக்கு போன் செய்ததாகவும்,

radha ravi vijay-updatenews360

அப்போது அன்று வந்தது போல் யாரை கூட்டி கொண்டு வர வேண்டாம் என்றும், சர்கார் இசை வெளியீட்டு விழாவில் குடித்துவிட்டு வந்தது போல இப்போது வராதீர்கள் என அசிங்கப்படுத்தி விட்டதனால், உடனே தான் வரலன்னு சொல்லி போனை வைத்துவிட்டேன் என்றும், யாரு தன் குடும்பம் தானே கூட்டிச்சென்றேன் என்றும், அவருக்கு கூட்டமா தான் தெரியும், தன் குடும்பம்-ல என்று புலம்பி இருக்கிறார் நடிகர் ராதாரவி.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 607

    0

    0