விஜய்க்கு மட்டும் காஸ்ட்லியா? விக்கு பிரச்சனையால் சண்டை போட்ட ராதாரவி!
Author: Shree21 March 2023, 10:59 am
சமீப நாட்களாகவே விஜய்க்கு வைக்கப்படும் விக்கு குறித்து நிறைய விமர்சனங்களும், கிண்டலும் பேசப்பட்டு வருகிறது. லியோ படத்துக்கு கூட 30க்கும் மேற்பட்ட விக்கு வைத்து ஹேர்ஸ்டைல் டெஸ்ட் எடுத்து பின்னர் ஒன்றை உறுதி செய்ததாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார்.
அந்தவகையில் தற்போது சில வருடங்களுக்கு முன்னர் ராதாரவி விஜய்க்கு வைக்கப்பட்ட விக்கு குறித்து பேசிய பேட்டி ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில்,
சர்கார் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தேன்.
அந்த படத்தில் விஜய்க்கு 25000ரூபாயில் காஸ்லியான விக் வைத்தார்கள். ஆனால் எனக்கு மிகவும் விலை குறைந்த விக்கு வச்சி மேக்கப் செய்தனர். அப்போது கோபத்தை அடக்கமுடியாமல் நான், உங்க ஹீரோவுக்கு மட்டும் காஸ்லியான விக் எனக்கு மட்டும் இதுவா? என கேட்டுவிட்டேன்.
முடியில் என்ன பெருசா வித்யாசம் வந்திடப்போகுது? எல்லாம் முடியும் ஒன்னு தான். ஹீரோவுக்கு வெச்சாலும் அதே முடி தான், ராதாரவிக்கு வெச்சாலும் அதே முடி தான் என்று மோசமான வார்த்தையால் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்: