பார்க்குறதுக்கு தான் நல்லவர்… நெப்போலியனை அசிங்கப்படுத்திய விஜய் – கிழித்த ராதாரவி!
Author: Shree4 May 2023, 10:46 am
நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.
நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.
பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின்ஹாம் ஹாம் டூர் விடாதேவ் சமூகவலைத்தளங்களில் வெளியாகை வைரலானது. அதன் பிறகு நிறைய யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த வருகிறார். இந்நிலையில், விஜய் உடன் இருக்கும் பல வருட பிரச்சனை குறித்து பேசியுள்ளார். போக்கிரி படத்தின் போது விஜய்யை சந்திக்க தன் குடும்பத்தினரை கேரவனில் கூட்டிச்செல்லும் போது விஜய் அவமானப்படுத்தப்படுத்தியுள்ளார் .
இதனால் இன்று வரை விஜய்யை ஒதுக்கி வருகிறார்.
இதே போன்று நடிகர் ராதா ரவி சர்க்கார் படத்தில் நடித்த போது, தந்து பேரன் விஜய்யின் தீவிர ரசிகர் என்பவரால் கேரவனில் சென்று சந்தித்து போட்டோ எடுத்துள்ளார். அதன் பின்னர் ராதாரவிக்கு போன் செய்து இனிமேல் இப்படி யாரையும் கூட்டிட்டு வராதீங்க என திட்டியுள்ளார். இதை அவர் வெளிப்படையாகவே ராதாரவி கூறினார். பார்ப்பதற்கு அமைதியாக நல்லவர் போன்று இருக்கும் விஜய்யா இப்படி செய்கிறார்? என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.