ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன்.. கொச்சையாக பேசிய ராதாரவியை யாரும் கண்டுக்கலயே.. சின்மயி ட்வீட்..!

Author: Vignesh
21 November 2023, 4:49 pm

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த டிஜிபிக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

mansoor ali khan

இதனிடையே, இந்த சமயத்தில் மன்சூர் அலிகான் பேசியது மட்டுமே கண்டிக்கத்தக்கது அல்ல. இவரை போல் இதற்கு முன்பு பலரும் நடிகைகள் குறித்து மோசமாக பேசியுள்ளனர் என்று சின்மயி பதிவு செய்துள்ளார். அதாவது, அதில் எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ் தான் தெரியும். எனக்கு ஹிந்தி தெரியாது இருந்தால் பாலிவுட் சென்று ஐஸ்வர்யா ராய்யை கெடுத்துருப்பேன் எனக்கு அப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் படத்தில் கொடுக்கிறார்கள். வேறு என்ன எனக்கு கடவுள் வேடமா படத்தில் கொடுக்கிறார்கள் என ராதாரவி பேசியிருந்தார். இந்த விஷயமும் தற்போது படு வைரலாகி வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்