கபாலி பட நடிகைக்கு “பெண்குழந்தை”…வாழ்த்து மழையில் தாயும் சேயும்..!
Author: Selvan14 December 2024, 7:50 pm
தாயான ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே,தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.
இவர் பிரகாஷ் ராஜ் நடித்த தோனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகி பின்னர் ரத்த சரித்தரம்,ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் 2012ஆம் ஆண்டு வயலின் இசைக்கலைஞரான பெனடிக்ட் டெய்லரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணமாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து,ராதிகா ஆப்தே தாயாகியுள்ளார். அவருக்கு பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது.
இதையும் படியுங்க: இளம் நடிகைகளுக்கு குறி…இயக்குனர் “சீனு ராமசாமி” விவாகரத்தின் பின்னணி… பகிரங்கமாக பேசிய பயில்வான்..!
குழந்தை பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில்,அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.