இதனாலதான் மன அழுத்தத்தில் இருந்தேன்.. கண்ணீர்விடும் ரஜினி பட நடிகை.!

Author: Rajesh
1 June 2022, 5:50 pm

ராதிகா ஆப்தே மராத்தி, தமிழ், பெங்காலி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துவரும் முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, நடிகைகள் சினிமா துறையில் எப்போதும் நிலைத்திருப்பதற்காகவும், வயதானாலும் தங்கள் அழகை மீட்டெடுக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறார்கள். தங்கள் முகத்தையும், உடலையும் அழகாக மாற்றி அமைக்க பல்வேறு சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர். பாடி பாசிடிவிட்டி பற்றி பேசுபவர்களும் இதைச் செய்வது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

‘கொரோனா காலத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் நடிக்க விரும்பிய பெரும்பால படங்களுக்கான வாய்ப்பு மற்றவர்களுக்கு சென்றது. அவர்கள் தங்களுக்கு வயதாவதை குறைக்க பல சிகிச்சைகள் மேற்கொண்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காக எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘ என்று சினிமாவில் அழகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் ஏற்படும் அழுத்தம் பற்றி கூறியுள்ளார்.
ராதிகா ஆப்தே தற்போது இந்தியில் தயாராகிவரும் ‘விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!