ச்சீ.. ரொம்ப மோசம்.. சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து குமுறிய ரஜினி பட நடிகை..!

Author: Vignesh
16 February 2024, 4:45 pm

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

Radhika Apte - updatenews360

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார். இந்நிலையில், ராதிகா ஆப்தே அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகை ராதிகா ஆப்தேவும் பாலகிருஷ்ணா உடன் நடித்த போது தனக்கு நடந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில், அவர் கூறுகையில், நான் ஷூட்டிங் வந்த முதல் நாளே அந்த நபர் என்னை பார்த்துவிட்டு என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டு சென்றார். கோபத்தில் உடனே எழுந்து அந்த இடத்திலே அவரை திட்டிவிட்டேன். ச்சீ.. ரொம்ப மோசம் தெலுங்கு திரை உலகமே ஆணாதிக்கம் நிறைந்தது.

Radhika Apte - updatenews360

நடிகர்கள், இயக்குநர்கள் பெண்களை மதிப்பதே இல்லை. அங்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் தெலுங்கு படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டேன்” என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார். மேலும் கூறுகையில், ஒரு ஹீரோ ஒருவர் என்னை அழைத்து “முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் என்னை கூப்பிடுங்கள்” என்றார். ஆனால், தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நடித்த போது அப்படி நடந்ததில்லை. அவர் போன்று சிறந்த மனிதர் இருக்க முடியாது. மிகவும் அன்பானவர் ரஜினிகாந்த் என்று ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

மேலும், ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கும் போது, அந்த படத்தில் பணியாற்றிய முதியவர் ஒருவர், நைட்டு உன் ரூமிற்கு நான் வரவா, என தைரியமாக கேட்டார், எனக்கு ஷாக் ஆகி, திட்டிவிட்டி கிளம்பினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 290

    0

    0