You Have done your best Viji.. விஜயகாந்த் மறைவுக்கு பிரபல நடிகை X தளத்தில் உருக்கமான பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2023, 9:52 pm

You Have done your best Viji.. விஜயகாந்த் மறைவுக்கு பிரபல நடிகை X தளத்தில் உருக்கமான பதிவு!!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது, அவரது உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள், மக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் உள்பட பல பாஜக தலைவர்கள் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை சமூக வலைதளம் மூலமாக தெரிவித்து வருகின்றனர், அந்த வகையில் அவருடன் நடித்த பிரபல நடிகையான ராதிகா தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில், You Have done your best Viji RIP என பதிவிட்டுள்ளார். நிறைய படங்களில் ஒன்றாக நடித்த நடிகை ராதிகா ட்வீட் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 481

    0

    0