கும்பலா வந்து கோவிந்தா… திட்டமிட்டு இறங்கிய ராதிகா – ஓஹோஹ் விஷயம் இதுதானா?

Author:
2 September 2024, 12:30 pm

இந்த நிலையில் நடிகை ராதிகா நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அனுபவத்தை பற்றி பேசி பகீர் கிளப்பியிருக்கிறார். கேரளாவில் இந்த விஷயம் ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் வெளியில் வந்துள்ளது. ஆனால் தமிழ் சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது. இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டுமானால் அனைவரும் அமர்ந்து ஒன்றாக இது குறித்து பேச வேண்டும்.

radhika - updatenews360.jpg 2

சினிமாவில் மட்டும் இல்லை எல்லா துறைகளிலுமே இது போன்ற பாலியல் சுரண்டல்கள் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அனைத்து பெண்களும் தைரியம் ஆனவர்கள் கிடையாது. ஆனால், பெண்கள் மிகவும் வலிமையாக இந்த விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் .

நான் சினிமாவில் அறிமுகமானபோது அப்பாவித்தனமாக இருந்ததால் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்தபோது அதிலிருந்து வெளிவரும் தைரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக நான் வளர்த்துக் கொண்டேன். இதே போன்ற பிரச்சனை நடிகை வரலட்சுமி சரத்குமாரும் எதிர்கொண்டு இருக்கிறார். அவர் அதைப் பற்றி தைரியமாக வெளியில் வந்து குரல் கொடுத்தார்.

அதுமட்டுமில்லாமல் கேரவனில் ரகசிய கேமராக்கள் வைக்கப்படுகிறது. நடிகைகள் துணி மாற்றுவதை கேரவனுக்குள் வீடியோ எடுத்து படம் பிடித்து வெளியிடுறாங்க. இது பல வருஷமா நடக்கிறது. எனவே நான் கேரவனில் கேமரா இருக்கா அப்படின்னு எப்பவுமே சரி பார்ப்பேன்.

Vishal

ஒருமுறை திருப்பதியில் என்னோட தோழி ஒரு நடிகைக்கு இது போன்ற பிரச்சனை ஏற்பட்டது. அவர்களை ஜன்னல் மூலமா எட்டி பார்க்க முயற்சி பண்ண ஒரு நபர் மீது அவர் சுடுதண்ணி எடுத்து மூஞ்சிலேயே ஊத்தினால். சீனியர் நடிகைகளின் இது போன்ற தைரியமான செயல்களை பார்த்து தான் எதையும் எதிர்கொள்ள தயார் ஆனேன் என ராதிகா கூறியிருந்தார்.

ராதிகாவின் இந்த புகாருக்கு கேள்வி எழுப்பியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் சேகுவேரா சமீபத்திய பேட்டி ஒன்றில்… “ராதிகா ஏன் இந்த விஷயத்தை இப்போது சொன்னார்கள். எப்போ நடந்துச்சோ அப்போவே சொல்லியிருக்க வேண்டும்.

Radhika press meet

தனக்கு அசிங்கமான விஷயம் நடந்திருக்கிறது என்றால் அது நடந்தபோதே சொல்லியிருந்தால் மற்ற நடிகைகளும் அலார்ட் ஆகியிருப்பார்கள். அதை விட்டுவிட்டு இப்போ வந்து எல்லாரும் கும்பலில் கோவிந்தா போடுறாங்க. இது ரொம்ப தப்பு. எனவே ராதிகாவை இந்த விஷயத்தில் பாராட்டக்கூடாது மலையாள நடிகைகளை தான் பாராட்ட வேண்டும்” என்றார்.

இதை கேட்ட ரசிகர்கள்… சொல்ல போனால் விஷால் இது குறித்து பேசின பிறகு தான் நடிகை ராதிகா அவருக்கு பதிலடி கொடுத்தார். எனவே விஷாலை பிரச்சனைக்குள் ஸ்ட்ராங்காக சிக்க வைக்க தான் ராதிகா வாய் திறந்திருப்பதாக தெரிகிறது என கருத்து கூறி வருகிறார்கள். நடிகர் விஷால் வரலக்ஷ்மி சரத்குமாரை காதலித்து பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ