அம்பானி மருமகள் ராதிகா அணிந்திருந்த புடவை இத்தனை கோடிகளா? கேட்டதும் மயக்கமே வந்துடுச்சு!

Author:
14 November 2024, 1:46 pm

அம்பானி:

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார்.

இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர். இதில் ஆனந்த் அம்பானிக்கு சில மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது.

ராதிகா மெர்சன்ட் புடவை:

ஆனந்த் அம்பானி பிரபலமான வைர வியாபாரியின் மகளான ராதிகா மெர்சன்ட் என்பவரை சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது .

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் அம்பானியின் மருமகளான ராதிகா மெர்சண்ட் அணிந்து வந்திருந்த புடவையின் விலை குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாக்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

தன்னுடைய மாமியார் நீடா அம்பானியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கோல்டன் நிறத்தில் பளபளக்கும் சேலையில் மின்னினார் ராதிகா. அப்போது அவர் அணிந்து வந்த அந்த சேலையின் விலை எவ்வளவு என்று விவரம் வெளியாகி தற்போது தலை சுற்ற வைத்திருக்கிறது.

புடவையின் விலை ரூ 345 கோடி:

.ராதிகா அணிந்திருந்த அந்த கோல்டன் கலர் ஜொலிக்கும் புடவையின் விலை சுமார் ரூ 345 கோடி என கூறப்படுகிறது. அந்த சேலையில் திறமை வாய்ந்த இந்திய நெசவாளர்களால் ஒவ்வொரு நூலும் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அந்த சேலை குறித்த தகவல் இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ