பாலிவுட்’லா இல்ல.. நேர பிரெஞ்சு மொழியில் முதல் முறையாக களமிறங்கும் பிரபல நடிகரின் மனைவி..!

Author: Vignesh
25 October 2023, 10:15 am

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு , அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகை ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வாயடைக்க வைத்துள்ளது. நடிகை ராதிகா ஒரு படத்திற்கு ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார். அத்துடன் இவர் கோடிக்கணக்கில் வங்கியில் பணம் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 100 – 120 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

sarathkumar-updatenews360

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து பல மொழி நடிகையாக சிறந்து விளங்கினார். அதன் பிறகும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆகி பல்வேறு வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர்கள் 2001 இல் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், 45 வருட சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்ட ராதிகா சரத்குமார் சில படங்களையும் தயாரித்துள்ளார்.பூர்வீக மொழிகளைத் தாண்டி பிரெஞ்சுப் படத்தில் நடிக்க உள்ளார்.

radhika - updatenews360.png d

தற்போது, ராதிகா சரத்குமார் படத்தில் நடிக்க பிரான்ஸ் சென்றுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், தன்னை பிரெஞ்சு படத்தில் நடிக்க ஊக்குவித்த கணவர் சரத்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது ராதிகா சரத்குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 569

    1

    2