மனசுல நயன்தாரான்னு நெனப்போ? Don’t Touch, Don’t Touch’ – திருப்பதியில் ரசிகையின் செயலால் கடுப்பான ராதிகா!

Author: Shree
1 July 2023, 11:06 am

ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். இவர் நடிகர் விஜயகாந்தை காதலித்து வந்தார். திருமணம் வரை சென்று பின்னர் ஏனோ காரணத்தால் அது நின்றுபோனது அதன் பின்னர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை ராதிகா தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற நடிகை ராதிகாவை பார்த்து ரசிகை ஒருவர் ஓடிவந்து அவர் தோள்மேல் கைபோட்டு போட்டோ எடுக்க முயற்சித்தார்.

உடனே ராதிகா திரும்பி முறைத்தபடி பார்க்க அங்கிருந்தக பவுன்சர்கள் தொடாதீர்கள்! தொடாதீர்கள்! என்று சத்தம் போட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆக நெட்டிசன்ஸ், ஆமா இவங்க பெரிய நயன்தாரா பாரு அந்தம்மா ஓடி வந்து அப்படி போட்டோ எடுக்க முந்திக்குது. இவங்களும் ஓவரா பில்டப் பண்றாங்க என விமர்சித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

  • கீர்த்தி முதல் நயன்தாரா வரை…தட்டி தூக்கிய ‘நெட்பிளிக்ஸ்’…கொத்தா இறங்கிய அப்டேட்கள்..!