தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோயின் ஆகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகை ராதிகா சரத்குமார். திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தன் தனித்துவமான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இவர் 80 மற்றும் 90க்களில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் , மோகன் போன்ற பல தவிர்க்க முடியாத ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து. முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படி பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி இடத்தை பிடித்திருந்தார்.
80ஸ் முதல் 90 காலகட்டம் வரை கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு அக்கா, அம்மா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ராதிகா இன்று தனது 62 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராதிகாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அதன்படி அவரின் முழு சொத்து மதிப்பு ரூ.120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் சென்னையில் மிக பிரம்மாண்டமான வீடு, ரியல் எஸ்டேட் தொழில்களில் முதலீடு, அத்துடன் தயாரிப்பு நிறுவனம் என பல வழிகளில் நடிகை ராதிகா பல கோடிகளை வருமானம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இவர் அரசியலிலும் காலம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.