ராதிகா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 1970 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் ராதிகா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
மேலும் சித்தி என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ராதிகா பல ஹிட் தொடர்களை தயாரித்து நடித்துள்ளார். அதன் பின் சன் டிவியில் சித்தி 2 சீரியலில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாகி விட்டார். தற்போது படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து நடிப்பு, தயாரிப்பு , அரசியல் என பிசியாக இருந்து வரும் நடிகை ராதிகா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. அதில், அவர் ஒருநாள் தனுஷ் எனக்கு போன் செய்தார். அப்போது, அவர் என்னிடம் அக்கா விஷயம் தெரியுமா? விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்கிறார்கள். விரைவில், திருமணம் செய்ய உள்ளார்கள் என்று சொன்னார். உடனே நான் என்னடா சொல்ற விளையாடாத நான் இப்பதான் அவங்களோட ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தேன் என சொன்னேன்.
உடனே தனுஷ் உங்களுக்கு வெக்கமா இல்லையா பெரிய நடிகையின்னு பந்தா பண்ணிக்கிட்டா மட்டும் போதாது. இதை கூடவா உங்களால கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொன்னார். எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாகிவிட்டது. ஏனென்றால், நானும் ரவுடிதான் ஷூட்டிங்கில் அவர்கள் காதலிப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில், எந்த இடத்திலும் அவர்கள் முறை தவறாமல் தங்கள் வேலைகளை மட்டுமே கவனம் செலுத்தினார்கள் என்று ராதிகா சரத்குமார் பேசிய விஷயம் தற்போது நயன்தாராவின் விவாகரத்து வதந்திகளுக்கு மத்தியில் தற்போது இந்த சமயத்தில் ராதிகாவின் பழைய பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.