“ஆள விடுங்க சாமி”..- பாரதிராஜாவால் அர்த்தராத்திரியில் தப்பி ஓட நினைத்த பிரபல நடிகை..!

Author: Vignesh
15 March 2023, 10:45 am

80, 90களில் தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். ,இவர் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர்களில் ராதிகாவும் ஒருவர்.

நடன இயக்குனராக பணியாற்றிய புலியூர் சரோஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடந்த பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.

அப்படி ஒருநாள் நடிகை ராதிகா அர்த்த ராத்திரி இருக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து பெட்டிப்படுக்கையோடு கிளம்ப தயாராகிவிட்டார்.

radhika - updatenews360.png d

அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது புலியூர் சரோஜா ராதிகாவை தற்செயலாக பார்த்திருக்கிறார் . “என்ன ஆச்சு எங்க போற என்று புலியூர் சரோஜா கேட்டதற்கு ராதிகா, அக்கா என்ன விட்ருங்க-கா, எனக்கு சினிமாவே வேண்டாம் என்னால ஆடவே முடியல ரொம்ப கால் வலிக்குது என்றும், தன் ஊருக்கே தான் போறேன்” என்று கூறிவிட்டாராம்.

puliyur saroja - updatenews360

உடனே ராதிகாவை சமாதானப்படுத்தி இருக்க கூறியதாகவும், பின்னர் மாஞ்சோலை கிளிதானோ பாடலில் பொறுமையாக கற்றுக்கொடுத்து பரத நாட்டியம் ஆடும் போது வலியில்லாமல் இருக்க மருந்தும் தேய்க்க கொடுத்தேன் என்று புலியூர் சரோஜா பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி