60,70களில் எம் ஜி ஆர் சிவாஜிக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்தவர் பழம் பெறும் நடிகர் எம் ஆர் ராதா. இவரது பிள்ளைகளாக தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகளாக திகழ்ந்து வருபவர்கள் ராதாரவி, ராதிகா, நிரோஷா போன்றவர்கள் இருக்கிறார்கள்.
முன்னதாக பாரதிராஜா மூலியமாக தன் தந்தையின் பெயரை எங்கும் வெளிப்படுத்தாமல், தன் நடிப்பின் திறமையால் முன்னுக்கு வந்தவர் ராதிகா. இவர் ஏதாவது பிரச்சினை வந்தால் அப்பாவை உறித்தது போல் கோபம் பொங்கி வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் தன்னை கேவலமாக விமர்சித்ததை எதிர்த்து கடற்கரை பகுதியில் செருப்பால் அடித்தார் என்று கூட பல செய்திகள் வெளிவந்தது. பத்திரிகை ஊடகங்கள் தன்னை பற்றி முரண்பாடாக தவறாக ஏதாவது பேசினாலும், அல்லது எழுதினாலும், அவர்களை அழைத்து நேருக்கு நேர் எதிராகவே கேள்வி கேட்டும் வந்துள்ளார் ராதிகா.
அதேபோல், பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவை திட்டி தீர்த்தும், மிரட்டியும் இருந்திருக்கிறார் ராதிகா. சமீபத்தில், அளித்த பேட்டியில் ராதிகாவிடம் பேட்டி எடுக்கும் போது முரண்பாடான கேள்விகளை பத்திரிகையாளரை கேட்குமாறு பத்திரிகையில் கூறியுள்ளனர்.
மறுநாள் அந்த பேட்டி பத்திரிக்கையில், வேறு மாதிரியான தலைப்பில் வேறு மாதிரியான ராதிகா புகைப்படத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதை பார்த்ததும் ராதிகாவுக்கு கோபம் தலைக்கேறி விட்டதாம்.
கோபம் தலைக்கேறிய ராதிகா உடனே பத்திரிக்கையாளர் செய்யாறு பாலுவை கால் செய்து தலைப்பு வேற மாதிரி இருக்கு விஷயம் வேற மாதிரி இருக்கே என்று கேட்டிருக்கிறார். எடிட்டோரியல் மாற்றி இருக்கிறார்கள் என்று செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
இப்படியே ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் துப்பாக்கி எடுத்து சூட் பண்ணிடுவேன் என்று மிரட்டியும் இருக்கிறார் ராதிகா. ராதாவின் மகள் கையில் குண்டடி பட்டு சாகிறது எனக்கு பெருமை தான் என்று செய்யாறு பாலு நக்கலாக தெரிவித்து இருக்கிறார். மீண்டும் கோபப்பட்டு போனை வைத்துள்ளார் ராதிகா என்று செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட்…
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
This website uses cookies.