அந்த மனசுதான் சார் கடவுள்.. குக் வித் கோமாளி பிரபலத்திற்கு ரூ.10 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்..!
Author: Vignesh7 April 2023, 5:30 pm
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தின் பாகம்-2 இயக்கயிருப்பதாக பி.வாசு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்காக நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நாம் கேள்விப்படும் விஷயங்களை தாண்டியும் பல நல்ல நல்ல செயல்களை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ருத்ரன் படத்தின் இசை வெளியிட்ட விழாவிலும் அப்படியொரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது, KPY பாலாவிடம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார். ராகவா லாரன்ஸ் போலவே எளிய மக்களுக்கு பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாலாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரூ. 10 லட்சம் தொகையை அவருக்கு வழங்கியதால் மேடையிலேயே பாலா மிகவும் நெகிழ்ந்துபோனார்.