கோடியில் சம்பளம் மேடையில் புகழ்ச்சி – நடிகையின் காதல் வலையில் சிக்கிய லாரன்ஸ்?

Author: Shree
12 April 2023, 5:05 pm

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தற்போது ருத்திரன் என்கிற படத்தில் நடித்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் விழாவில் பேசிய லாரன்ஸ்,

priya bhavani shnkar dp

முதல் முதலாக தமிழ் நடிகையுடன் இணைந்து நடிப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என லாரன்ஸ் கொஞ்சம் ஓவரா புகழ்ந்து பேசியது அங்கிருந்தவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் இப்படத்திற்கு பிரியா பவானி ஷங்கருக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான பத்து தல படத்திற்கு அவர் ரூ. 75 லட்சம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் தான் பிரியா பவானி ஷங்கர் தனது நீண்ட நாள் காதலன் ராஜவேல் என்பவரை ப்ரேக்கப் செய்துவிட்டார். இதையெல்லாம் வச்சி பார்த்தால் ஒரு வேலை ராகவா லாரன்ஸ் பிரியா பவானியின் வலையில் விழுந்துவிட்டாரோ? என சந்திக்கிறது கோலிவுட் சினிமா. அப்படி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1784

    76

    61