பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!
Author: Selvan27 March 2025, 9:54 pm
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.பிரியங்கா மற்றும் மகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில்,இசை அமைப்பாளர் டி.இமான்,பாடகர்கள் மனோ மற்றும் சித்ரா ஆகியோர் நடுவராக செயல்படுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி மூலம் பல குழந்தைகள் தங்களது இசைத்திறனை வெளிக்கொண்டு வந்து முன்னேறி வருகின்றனர்.அந்த வகையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நஸ்ரின் என்பவரின் குடும்பத்திற்கும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
நஸ்ரினின் அம்மாவிற்கு சொந்தமாக தையல் கடை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்துள்ளது,ஆனால் வறுமையின் காரணமாக அவர்களால் கடை வைக்கமுடியவில்லை.இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ்,அவருடைய அம்மாவிற்கு ஒரு புதிய தையல் கடையை அமைத்து கொடுத்து, அதற்கு “நஸ்ரின் தையல் கடை” என்று பெயர் வைத்துள்ளனர்.
சமூக பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ்,இந்த நற்செயலால் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.