காஞ்சனா 4-ல் இணைந்த பாலிவுட் நடிகை…தரமான பேயா இருக்குமோ…சம்பவம் செய்யும் லாரன்ஸ்..!

Author: Selvan
30 January 2025, 7:08 pm

காஞ்சனா-4 புது அப்டேட்

தமிழ் சினிமாவில் பேயை வைத்து தரமான சம்பவம் பண்ணும் இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதனுடைய அடுத்தடுத்து பாகத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

Nora Fatehi in Kanchana 4

கிட்டத்தட்ட காஞ்சனா-3 வரை எடுத்து முடித்த இவர்,தற்போது அதனுடைய நான்காம் பாகத்தை இயக்க திட்டமிட்டு,அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.

இதையும் படியுங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,தற்போது பிரபல பாலிவுட் நடிகையான நோரா பதேகியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.

இதில் அவர் பேயாக நடிக்க உள்ளாரா,இல்லை வேற ஏதும் ரோலில் நடிக்க இருக்கிறாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.இப்படம் பான் இந்திய அளவில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!