ஆஹா.! இவ்ளோ அழகான பேயா…காஞ்சனா 4 -ல் நடிக்கும் பிரபல நடிகை..!

Author: Selvan
30 December 2024, 5:46 pm

காஞ்சனா 4-ல் பேயாக நடிக்கும் பூஜா ஹெக்டே

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து பின்பு நடிகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ராகவா லாரன்ஸ்.

இவர் சினிமாவை தாண்டி பல சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்,அதுமட்டுமல்லாமல் பல குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை படிக்க வைத்து,தன்னுடைய குழந்தைகள் போல் வளர்த்து வருகிறார்.

Pooja Hegde Ghost Role in Kanchana 4

இப்படி மக்கள் சேவை நாயகன் ராகவா லாரன்ஸ் தற்போது காஞ்சனா4 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.முனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பாகங்களான காஞ்சனா வெர்சன் வெளியிட்டு மிகப்பெரிய ஹிட் கொடுத்தார்.

இதையும் படியுங்க: தங்கங்களா..அண்ணன் உங்களுக்கு பாம்பு ஷோ காட்ட போறேன் : வைரலாகும் TTFவாசன் வீடியோ.!

இந்த நிலையில் காஞ்சனா4-ல் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் அவர் பேயாக நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.

Pooja Hegde Raghava Lawrence Collaboration

பூஜா ஹெக்டே தற்போது தளபதி69 மற்றும் சூர்யாவின் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் காஞ்சனா4-ல் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.ஒரு வேளை இந்தப்படத்தில் நடித்தால் அடுத்த வருடம் பூஜா ஹெக்டேக்கு ஒரு சிறப்பான வருடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Ajithkumar's Vidaamuyarchi Twitter review Vidaamuyarchi Twitter review: சாதித்தாரா அஜித்குமார்? விடாமுயற்சி விமர்சனம்!