சுழட்டி அடிக்க போகும் “காஞ்சனா 4″…ராகவா லாரன்ஸ் கொடுத்த மிரட்டலான அப்டேட்..!

Author: Selvan
19 December 2024, 2:20 pm

தொடரும் காஞ்சனா ஆட்டம்

தமிழ் சினிமாவில் ஏழைகளின் கொடை வள்ளல் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் ராகவா லாரன்ஸ்.இவர் நடனம்,இயக்குனர்,நடிகர் என பல வித துறைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

Kanchana 4 update

இவரது நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான முனி திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில்,அதனுடைய அடுத்தடுத்து பாகங்களான காஞ்சனா படங்களை எடுத்தார்.திரில்லர்,பேய் கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த காஞ்சனா தொடர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

தற்போது,இதனுடைய அடுத்த பாகமான காஞ்சனா 4 படத்தை இயக்க உள்ளார்.இந்தப்படத்திலும் இவரே நாயகனாக நடிக்கிறார்.

இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!

இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் 3 ஆண்டுக்கு பிறகு காஞ்சனா 4 படத்தை கையில் எடுத்து உள்ளார்.

இப்படம் அடுத்த ஆண்டு மே மதம் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகைகள்,கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

  • Bala 25th anniversary celebration தூக்கிவிட்டவரை தூக்கி வீசிய விக்ரம்…இயக்குனர் பாலாவுடன் இப்படி ஒரு பகையா..!
  • Views: - 52

    0

    0

    Leave a Reply