அப்பா மரணம்… என் புள்ளையை வாழ வச்சது சூப்பர் ஸ்டார் – ராகவா லாரன்ஸின் அம்மா கண்ணீர் பேட்டி!
Author: Shree29 September 2023, 4:41 pm
நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.
ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் சந்திரமுகி 2. 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இப்படத்தில் ரஜினி நடித்திருந்த ரோலில் வேட்டையனாக லாரன்ஸ் நடித்திருக்கிறார். இவருடன் கங்கனா ரனாவத் , வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராகவா லாரன்ஸின் தயார் கண்மணி , ராகவா லாரன்ஸ் மிகவும் திறமையானவர், நல்ல டான்சர் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். ஆனால், அந்த திறமையை உலகத்திற்கு காட்ட அவர் ரொம்ப கஷ்டப்பட்டார் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தான் தெரியும்.
ஆம், லாரன்ஸின் 15 வயதிலே அவரது அப்பா இறந்துவிட்டார். இதனால் குடும்பம் மிகவும் வறுமையில் இருந்தது. பஸ்ல போக கூட காசு இருக்காது. அதனால், 4 கிலோ மீட்டர் நடந்துதான் வேளைக்கு செல்வேன். பிள்ளைகளை காப்பாற்ற. அம்மா, தம்பி என அப்பப்போ உதவி செய்வாங்க. ஆனாலும், குடும்பம் தலை நிமிர முடியவில்லை. இதனால் லாரன்ஸ் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டான். நடனத்தின் மீது ஆர்வம் அவனுக்கு அதிகம்.
எனவே நான் டான்சர் கார்டு வ்மகி கொடுத்து சேர்த்துவிட்டேன். அந்த சமயத்தில் எங்களின் நிலைமையை அறிந்து ஃபைட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் தான் எங்களுக்கு பண உதவி செய்தார். ஆனாலும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எங்கு சென்றாலும் ரொம்ப கருப்பா இருக்கிறான்னு வெளிய அனுப்பிடுவாங்க. பிறகு சுப்புராயன் சார் ரஜினி படத்தின் ஷூட்டிங் ஒன்றிற்கு கூட்டிச்சென்றார்.
அவரிடம் எடுத்து சொல்ல ரஜினி வீட்டுற்கு வந்து சந்திக்க சொன்னார். அப்போது தன் கைப்பட சிபாரிசு கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். அதன் பிறகு தான் வாய்ப்புகள் கிடைத்து பாடல்களுக்கு நடனமாடி பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானான் லாரன்ஸ் என அவரது அம்மா அந்த பேட்டியில் உருக்கமாக பேசினார். எனவே என் புள்ளைக்கு வாழ்க்கை கொடுத்தது சூப்பர் சுப்புராயன் சார் வாழவச்சது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என அவர் கூறினார்.