தெம்மாங்குல இருந்தாரா லாரன்ஸ்? லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த சப்ப காரணம்!

Author: Shree
15 April 2023, 10:01 pm

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

vikram movie

அவரது நடிப்பில் நேற்று ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் திரைபடம் ரிலீசானது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் ரோலுக்கு முதலில் லாரன்ஸிடம் தான் நடிக்க கேட்டாராம். ஆனால், லாரன்ஸ் ருத்ரன் , சந்திரமுகி 2 தொரைப்படங்களில் பிசியாக நடித்து வந்ததால் வேண்டாம் என கூறிவிட்டாரம். ஆனால், இந்த படங்களை விட விக்ரம் மிகப்பெரிய வெற்றி அடைந்துவிட்டது. அதன் பின்னர் லோகேஷும் வேற லெவலுக்கு போய்விட்டார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ