அடித்தது மிகப்பெரிய தவறு… மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்!

Author: Shree
27 August 2023, 4:54 pm

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் ‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், ராவ் ரமேஷ், ஒய். ஜி. மகேந்திரன், ரவி மரியா, சுரேஷ் மேனன், விக்னேஷ், சாய் அய்யப்பன், சத்ரு, டி. எம். கார்த்திக், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. எம். தமிழ்குமரன் தலைமை வகிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது பவுன்சர்களின் கட்டுப்பாட்டை மீறி தண்ணீர் குடிக்கப்போவதாக மேடை அருகே செல்ல முயன்ற மாணவர் ஒருவரை பவுன்சர் தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பவுன்சர்களிடம் குத்து வாங்கிய அந்த மாணவர் தனது நண்பர்கள் கூட்டத்தை அழைத்து வந்து பவுசர்களை அடிக்க சொல்லியுள்ளார். இதனால் நண்பர்களையும் சேர்த்து குமுறி கூர் கட்டிவிட்டார்கள் பவுன்சர்கள். இந்த விவகாரம் வீடியோவுடன் சமூகவலைதங்களில் வெளியாகி செம வைரலாகியது.

இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ” அனைவருக்கும் வணக்கம், நமது சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது பவுன்சர் ஒருவர் கல்லூரி மாணவனுடன் முஷ்டி சண்டையில் ஈடுபட்ட துரதிஷ்டமான சம்பவம் பற்றி இப்போதுதான் அறிந்தேன்.

முதலில் இந்த சம்பவம் அரங்கிற்கு வெளியே நடந்ததால் நானோ அல்லது ஏற்பாட்டாளர்களோ இந்த சம்பவம் குறித்து அறிந்திருக்கவில்லை. மாணவர்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் மற்றும் அவர்கள் வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அப்படிப்பட்ட நபராக நான் இருப்பதால், இதுபோன்ற சண்டைகளுக்கு நான் எப்போதும் எதிரானவன். நான் செல்லும் எல்லா இடங்களில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.

காரணம் எதுவாக இருந்தாலும் ஒருவரை அடிப்பது கண்டிப்பாக தவறு & குறிப்பாக மாணவராக இருக்கும் போது இது நடந்திருக்கக்கூடாது. அந்த நேரத்தில் நடந்ததற்கு நான் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இது போன்ற செயல்களில் இனிமேல் பவுன்சர்கள் ஈடுபட வேண்டாம் என்று மனதார கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ