பொண்ணா அடக்கமா இருக்க முடியாது… கீர்த்தி சுரேஷின் “ரகு தாத்தா” ட்ரைலர் ரிலீஸ்!

Author:
31 July 2024, 5:51 pm

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ரகு தாத்தா”

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாநாயகியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இயக்குனர் சுமன் குமார் எழுதி இயக்கியுள்ள “ரகு தாத்தா” திரைப்படத்தை கே ஜி எஃப், சலார் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹாம்பலோ ஃபிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.

இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் “பொண்ணா அடக்கமாலா இருக்க முடியாது” என்று டயலாக் பேசி சுதந்திரப் பறவையாக சுற்றி தெரியும் பெண்ணாகப். நடித்துள்ளார். மேலும் விருப்பமே இல்லாமல் ஹிந்தி கற்றுக் கொள்ளும் காட்சிகளில் கீர்த்தி சுரேஷுக்கு அப்ளாஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ:

  • Good Bad Ugly special premiere சர்ப்ரைஸ்.! ‘குட் பேட் அக்லி’ பட ரிலீஸில் ட்விஸ்ட்…தமிழில் இதுவே முதல்முறை.!