பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!
Author: Udayachandran RadhaKrishnan4 March 2025, 7:00 pm
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.
ரகுவரன் தனிப்பட்ட வாழ்க்கதான் அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. நடிகை ரோகிணியை திருமணம் செய்த அவருக்கு ஒரு மகன் உள்ளது. ஆனால் மனைவியை பிரிந்து தனியாக ரகுவரன் வாழ்ந்து வந்தார்.
இதையும் படியுங்க : படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!
இந்த நிலையில் நடிகர் ரகுவரன் ஆரம்ப காலக்கட்டத்தில் பிரபல நடிகை அமலாவை காதலித்து வந்துள்ளார். 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமான அமலா.
ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என அன்றைய முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர், தமிழ் தெலங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என இந்தியா முழுவதும் பிரபலமானார்.
1987ல் கூட்டுப்புழுக்கள் படத்தில் நடித்த போது உடன் நடித்த ரகுவரன் ஜோடியாக நடித்தார். அப்போது ரகுவரனுக்கு நடிகை அமலா மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த காதலை ஏற்க அமலா மறுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் ரகுவரன். 1992ல் நடிகை அமலா நடிகர் நாகர்ஜூனாவை காதலித்து திருமணம் செய்தார்.
இதையடுத்துதான் மதுவுக்கு அடிமையான அவர், பின்னர் நடிகை ரோகிணியை காதலித்து 1996ஆம் ஆண்டு திருமணம் செய்தார். 2004ஆம் ஆண்டு இருவரும் பிரிந்த நிலையில் 2008ஆம் ஆண்டு அளவுக்கதிமாக மது அருந்தியதால் உடல் உறுப்புகள் செயலிழந்து 49 வயதில் மரணமடைந்தார்.