பையன் கேட்ட மறுநாள் குதிரையே வாங்கிட்டு வந்துட்டாரு… ரகுவரனுக்கு மகன் மீது இவ்வளவு பாசமா!

வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையால் மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.

நல்ல உயரம், தோற்றம் என கம்பீரமாக இருந்த ரகுவரனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படம் மாபெரும் ஹிட் அடித்து யார் இந்த நடிப்பு அரக்கன் என உலகம் முழுக்க உள்ள ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.

தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், ‌தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறான். அதன் பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துபிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம்.

அந்த நேரங்களில் சரியாக படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு முறை சிக்கனலில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்து, இது தன் மகனோ? தான் மனைவியையும் மகனையும் விட்டுசென்றதால் தான் இந்த நிலைக்கு வந்திட்டேனோ? என்றெல்லாம் பயந்து போன் பண்ணி விசாரித்தாராம். அந்த அளவிற்கு தனிமை அவரை மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு நலிவிழந்து 2008ம் ஆண்டு மறைந்துவிட்டார்.

ரகுவரன் தன் மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தாராம். மகனுக்காக அவர் என்னவேணாலும் செய்வாராம். இரவு நேரத்தில் எதையேனும் வேண்டும் என மகன் ரிஷி கேட்டால் அது மிட் நைட் நேரமாக இருந்தால் கூட அப்போவே சென்று பூட்டிய கதவை திறக்க சொல்லி கூட அதை வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பாராம். அப்படித்தான் ஒரு முறை வீடு எதிரில் குதிரை ஒன்று சென்றதும். அதை பார்த்ததும் மகன் ரிஷி அப்பா எனக்கு அது வேணும் என கேட்டதும் மறுநாளே அந்த குதிரையை வாங்கிட்டு வந்தாராம். இதை பார்த்து மனைவி ரோகினி அவன் சின்ன பையன் அவனுக்கு எதுவும் தெரியாது. கேட்டதெல்லாம் உடனே வாங்கி கொடுக்க கூடாது என எடுத்து சொன்னாராம்.

https://www.youtube.com/shorts/5L4aBkPVe58
Ramya Shree

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

18 hours ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

19 hours ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

19 hours ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

20 hours ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

21 hours ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

21 hours ago

This website uses cookies.