வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் அதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையால் மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர் கேரளாவில் உள்ள கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார்.
நல்ல உயரம், தோற்றம் என கம்பீரமாக இருந்த ரகுவரனுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. 1982 ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்.அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படம் மாபெரும் ஹிட் அடித்து யார் இந்த நடிப்பு அரக்கன் என உலகம் முழுக்க உள்ள ரசிகர்களின் கேள்வியாக இருந்தது.
தமிழ் மட்டும் இன்றி இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தனது முதல் மலையாள திரைப்படமான “காக்கா” என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ரோஹிணியை காதலித்து 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறான். அதன் பின்னர் ரோகினி உடன் ஏற்பட்ட மனக்கசப்பினால் அவரை 2004ம் ஆண்டு விவாகரத்து செய்துபிரிந்துவிட்டார். விவாகரத்துக்கு பின் அவர் மிகவும் தனிமையில் வாடினாராம்.
அந்த நேரங்களில் சரியாக படங்களில் கூட கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகள் கேப் விழுந்துள்ளது. அந்த நேரத்தில் தனிமையை போக்க குடிபோதைக்கு அடிமையாகி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கிட்டத்தட்ட மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஒரு முறை சிக்கனலில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை பார்த்து, இது தன் மகனோ? தான் மனைவியையும் மகனையும் விட்டுசென்றதால் தான் இந்த நிலைக்கு வந்திட்டேனோ? என்றெல்லாம் பயந்து போன் பண்ணி விசாரித்தாராம். அந்த அளவிற்கு தனிமை அவரை மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது. இதனிடையே போதை பழக்கத்திற்கு அடிமை ஆனதால் உடல்ரீதியாக பிரச்சனை ஏற்பட்டு நலிவிழந்து 2008ம் ஆண்டு மறைந்துவிட்டார்.
இந்நிலையில் ரகுவரனின் தயார் கஸ்தூரி சக்குங்கல் சமீபத்திய பேட்டி ஒன்றில் ,ரகுவரன் குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார். அதாவது தனுஷுடன் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் நடித்தபோது தனுஷ் என் மகன் போலவே இருக்கிறான் என அம்மாவிடம் கூறினாராம் ரகுவரன். மேலும் அம்மா ஷூட்டிங் போகும்போதெல்லாம் வழி அனுப்பி வைத்தால் தான் செல்வாராம். அம்மா மீது அவ்வளவு பாசம் வைத்திருந்திருக்கிறார் ரகுவரன்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.